கூலிக்கு போட்டியாக வந்த வார் 2 படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

வார் 2
YRF நிறுவனம் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் வார் 2.
இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த வார் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வார் 2 திரைப்படம் முதல் நாள் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது.