ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் செய்துள்ள ரஜினியின் கூலி… அடேங்கப்பா. முதல் நாள் முழு கலெக்ஷன் விவரம்

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் செய்துள்ள ரஜினியின் கூலி… அடேங்கப்பா. முதல் நாள் முழு கலெக்ஷன் விவரம்


ரஜினியின் கூலி

தமிழகத்தில் நாளை எல்லா திரையரங்குகளும் திருவிழா கோலமாக இருக்கப்போகிறது, காரணம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கூலி படம் நாளை (ஆகஸ்ட் 14) படு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியை தாண்டி நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், ஸ்ருதிஹாசன், சிறப்பு வேடத்தில் அமீர்கான் என பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் படத்தில் தயாராகியுள்ள பாடல்கள் எல்லாம் ஹிட் தான், மோனிகா பாடல் இப்போது யூடியூபில் டிரெண்டிங்கில் தான் உள்ளது.

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் செய்துள்ள ரஜினியின் கூலி... அடேங்கப்பா. முதல் நாள் முழு கலெக்ஷன் விவரம் | Rajinikanth Coolie First Day Pre Sale Detail

ப்ரீ புக்கிங்


படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் செம மாஸாக நடக்கிறது, சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பதால் சன் டிவியில் அடிக்கடி படத்தின் புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

யூடியூபில் அவர்கள் பதிவிடும் எல்லா வீடியோக்களுக்கு முன்பும் கூலி பட புரொமோ பதிவிடுகிறார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் ரஜினியின் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் விவரங்கள் தான் வெளியாகியுள்ளது.


முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே உலகம் முழுவதும் படம் ரூ. 100 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாம். ரஜினி படங்கள் வசூல் வேட்டை நடத்துவதும், புக்கிங்கிலேயே கலெக்ஷன் பெறுவது வழக்கம் தான்.

இந்த கூலி படம் இதுவரை இருந்த மற்ற நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *