கூலி ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் என மாபெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சாதனை படைத்து வருகிறது.
படம் ரிலீஸ் ஆக இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது.