விஜய் சேதுபதியில் தலைவன் தலைவி இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு கலெக்ஷன்

தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜுலை 25ம் தேதி வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.
கணவன்-மனைவி உறவுச் சிக்கல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க இப்படம் தெலுங்கிலும் வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் வெளியான பொட்டல முட்டாயே பாடல் யூடியூபில் 3 கோடிக்கு மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வசூல்
தமிழை தாண்டி தெலுங்கிலும் செம வரவேற்பு பெற்றுவரும் தலைவன் தலைவி படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் ரூ. 75 கோடிக்கும் அதிகமான வசூலை படம் பெற்றுள்ளதாக படக்குழு சில நாட்கள் முன் அறிவித்துள்ளார்கள். தற்போது வரை படம் மொத்தமாக ரூ. 86 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.