தரமான கருத்துடன் இன்றோடு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்…

பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றியின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பானது.
இதில் சுசித்ரா என்ற புதுமுக நடிகை முக்கிய நாயகியாக நடிக்க நாம் பார்த்து பழக்கப்பட்ட சில நடிகர்களும் நடித்திருந்தனர்.
தனது குடும்பத்தினராலேயே அசிங்கப்படுத்தப்பட்ட பாக்கியா என்ற பெண் எப்படி தனது வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்றார் என்பதை நோக்கிய கதையாக சீரியல் இருந்தது.
கிளைமேக்ஸ்
இனியா-ஆகாஷ் திருமணத்தோடு இனிதே சீரியல் முடிவுக்கு வந்தது.
சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்களை வைத்து கருத்து கூறுவதுடன் தொடர் முடிவுக்கு வருகிறது.