அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி.. அட சூப்பர் போங்க

அய்யனார் துணை
விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல் அய்யனார் துணை.
ராம்குமார் தாஸ் இயக்க ப்ரியா தம்பி கதை எழுதி ஒளிபரப்பாகும் இந்த தொடரில் மதுமிதா, அரவிந்த், முனாஃப், அருண் கார்த்தி, பர்வேஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
2025, ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 150 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
குட் நியூஸ்
இப்போது கதையில் சோழனிடம் போட்ட சவாலில் ஜெயிக்க மனோகர் பாசமாக இருப்பது போல் நடித்து நிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
அங்கு சோழனை நிலாவிற்கு தெரியாமல் நிறைய அசிங்கப்படுகிறார்.
இப்போது சோழனிடம் பணம் கொடுத்து வெளியே அனுப்பி அதை மனோகர் ஆட்களை வைத்து திருடி விடுகிறார். சோழனையும் கடத்தி வைத்து நிலாவிடம் அவன் தான் பணத்தை திருடிக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டான் என்கிறார்.
இப்படியிருக்க சோழனின் அண்ணன்-தம்பிகள் அவரை கண்டுபிடித்து என்ன உண்மை என்பதையும் அறிந்துகொள்கிறார்கள்.
இப்படி கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாக ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறதாம். தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தொடரை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள்.
கன்னடத்தில் ஒளிபரப்பாகும் தொடருக்கு Shrigandada Gudi என பெயரிட்டுள்ளனர்.