இளம் சென்சேஷனல் நாயகிக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா

துருவ் விக்ரம் அடுத்த படம்
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கப்போகும் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, முன்னணி இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில்தான் துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளாராம்.
தக் லைஃப் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் காதல் கதைக்களத்தில் இளம் நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
கதாநாயகி
அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஹீரோவாக துருவ் விக்ரம் தேர்வாகியுள்ளார்.
மேலும் கன்னட திரையுலகம் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்த நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம்.
செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ருக்மிணி தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.