"சாதி, அந்தஸ்து, காசு என்பது முக்கியம் இல்லை"- பாடகர் ஸ்ரீநிவாஸ்

சென்னை,
பிரபல பிண்ணி பாடகர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 3 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள “மின்சாரப்பூவே” மற்றும் சத்யராஜ்ஜின் ஒன்பது ரூபா நோட்டு படத்தில் “மார்கழியில் குளிச்சி பாரு” உள்ளிட்ட பல ஹிட் பாடல்கள் இவர் பாடியதுதான்.
பாடகர் ஸ்ரீநிவாஸ் தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலக்கினார். இந்த நிலையில், ஸ்ரீநிவாஸ் தனது மகள்கள் மற்றும் குடும்பம் குறித்து பகிர்ந்த தகவல் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீநிவாஸ் கூறியதாவது: “என் இரண்டு மகள்களுக்கும் அவர்கள் விரும்பிய விருப்பத்தின்படி காதல் திருமணம் தான் நடைபெற்றது. அதில் எனக்குப் பெருமிதம் தான். அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை விட்டுவிட்டேன். சாதி, அந்தஸ்து மற்றும் காசு என்பது முக்கியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். தனது மகள்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்களுக்கு ஆதரவாக இருந்து விருப்பத்தை நிறைவேற்றிய ஸ்ரீநிவாஸின் செயல் பாராட்டுக்குரியது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.