ஹவுஸ் மேட்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

தர்ஷன்
கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தர்ஷன். இதன்பின், தும்பா எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனால், குக் வித் கோமாளிதான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இதன்பின் அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹவுஸ்மேட்ஸ்
இந்த நிலையில், தர்ஷன் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் ஹவுஸ்மேட்ஸ். இப்படத்தை இயக்குநர் ராஜா வேல் இயக்கியிருந்தார். அர்ஷா சாந்தினி, காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டுமே ரூ. 60 லட்சம் வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.