மனைவியிடம் நீ பேசிய ஆடியோவை போடவா? பிரபலத்தை மிரட்டிய ரவீந்தர்!

மனைவியிடம் நீ பேசிய ஆடியோவை போடவா? பிரபலத்தை மிரட்டிய ரவீந்தர்!

விஷ்ணுவை ரவீந்தர் மிரட்டிய வீடியோ கவனம் பெற்றுள்ளது.

பிக் பாஸ் 8



பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் செய்யப்பட்டார்.

ravinder - mahalakshmi


தொடர்ந்து ஆறு சீசன்களை ரிவ்யூ செய்துள்ளார். இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போவது முத்துக்குமாரன்தான் என்று சப்போர்ட் செய்து வருகிறார்.

இதேபோல், சௌந்தர்யாவிற்கு முந்தைய சீசன் போட்டியாளரான விஷ்ணு சப்போர்ட் செய்து வருகிறார்.

 கொந்தளித்த ரவீந்தர்

இந்நிலையில், ட்விட்டரில் பிக் பாஸ் ரிவ்யூவர்ஸ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

அப்போது, ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு போன் செய்து விஷ்ணு ரவீந்தர் இப்படி தொடர்ச்சியாக பேசி வருவது தவறு என்று பேசி இருப்பது போல தெரிகிறது.

மனைவியிடம் நீ பேசிய ஆடியோவை போடவா? பிரபலத்தை மிரட்டிய ரவீந்தர்! | Ravinder Bigg Boss Vishnu Clash Social Media Viral



ரவீந்தர் நீ சௌந்தர்யாவுக்கு பி ஆர் வேலை செய்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது ஆனால் நான் முத்துக்குமரனுக்கு அப்படி செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.


நீ என்னுடைய மனைவியிடம் போன் பண்ணி பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது அதை நான் லீக் செய்யவா? என்று மிரட்டி இருக்கிறார்.

லைவில் இருவரும் இவ்வாறு வாக்குவாதம் செய்துக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *