விஜய் இல்லாமல் LCU.. லோகேஷ் கனகராஜ் கூலி நிகழ்ச்சியில் என்ன கூறினார் பாருங்க

விஜய் இல்லாமல் LCU.. லோகேஷ் கனகராஜ் கூலி நிகழ்ச்சியில் என்ன கூறினார் பாருங்க


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூலி படத்தை ப்ரோமோஷன் செய்தார்.

லோகேஷின் முந்தைய படமான லியோவில் விஜய் நடித்து இருந்தார். அது LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருந்தது.

விஜய் இனி LCU படங்களில் நடிப்பாரா என்பது பற்றி கல்லூரி நிகழ்ச்சி மேடையில் பேசி இருக்கிறார் லோகேஷ்.

விஜய் இல்லாமல் LCU.. லோகேஷ் கனகராஜ் கூலி நிகழ்ச்சியில் என்ன கூறினார் பாருங்க | Lcu Wont Fulfill Without Vijay Lokesh Kanagaraj

விஜய் இல்லாமல் LCU இல்லை

“விஜய் இல்லாமல் LCU இருக்காது. ஆனால் அவர் அதில் நடிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இப்போது அவரது எண்ணம் என்ன என்பது உங்களுக்கு தெரியும், அவரது முயற்சியும் தெரியும்.”

“என் சினிமாவுக்காக அதை பற்றி சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன். எப்போதுமே LCU விஜய் அண்ணா இல்லாமல் முழுமை அடையாது” என லோகேஷ் கூறி இருக்கிறார்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *