ஷாருக்கான், சல்மான் கானின் சாதனையை முறியடித்த ஹிருத்திக் ரோஷன்|Hrithik Roshan beats Salman Khan, Shah Rukh Khan due to….

ஷாருக்கான், சல்மான் கானின் சாதனையை முறியடித்த ஹிருத்திக் ரோஷன்|Hrithik Roshan beats Salman Khan, Shah Rukh Khan due to….


சென்னை,

ஆகஸ்ட் மாதத்தில் பல பெரிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹிருத்திக் ரோஷனின் ‘வார் 2’ படமும் அதில் ஒன்று.

இதன் முதல் பாகம் 2019-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டரானது. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி இருக்கிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவெர்ஸின் கீழ் தயாராகியுள்ள இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆக்ஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படம் வெளியாவதற்கு முன்பே, சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் சாதனையை ஹிருத்திக் ரோஷன் முறியடித்திருக்கிறார்.

‘வார் 2’ படம் இந்த யுனிவெர்ஸில் முன்னதாக வெளியான சல்மான் கானின் ”டைகர்” மற்றும் ஷாருக்கானின் ”பதான்” படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவெர்ஸின் கடைசி படம் ‘டைகர் 3’ ஆகும், இது ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.240 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த பெரிய சாதனையை ஹிருத்திக் ரோஷன் முறியடித்துள்ளார். வார் 2 படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 170 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *