வைரலாகும் நஸ்லேன்-கல்யாணி பிரியதர்ஷன் படத்தின் டீசர்…திரைக்கு வருவது எப்போது?

வைரலாகும் நஸ்லேன்-கல்யாணி பிரியதர்ஷன் படத்தின் டீசர்…திரைக்கு வருவது எப்போது?


திருவனந்தபுரம்,

”லோகா” படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி இருக்கிறார். இப்படத்திற்கு ”லோகா” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதனுடன் இப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *