தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

மை டியர் பூதம்:

மஞ்சப்பை பட புகழ் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மை டியர் பூதம். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பல திறமைகள் கொண்ட பிரபு தேவா பூதமாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

கிங்ஸ்டன்:

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கிங்ஸ்டன். இப்படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் ராஜ் மட்டுமின்றி திவ்யபாரதி, இளங்கோ குமரவேல், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஃபாண்டஸி ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

வினோதய சித்தம்:

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தாலும் மக்களின் மனதை கவர்ந்து மாபெரும் வெற்றிப்படமாக மாறியது வினோதய சித்தம் திரைப்படம்.

சமுத்திரக்கனி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

ஓ மை கடவுளே:

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கற்பனை, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து வெளிவந்த திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ஹிட் கொடுத்தது.  

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

மரகத நாணயம்:

நகைச்சுவை கலந்த சிறந்த அட்வென்ச்சர் திரைப்படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், டேனியல், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

அகத்தியா:

அகத்தியா ஒரு ஃபேண்டஸி திரைப்படம், புராணக்கதைகளும், கற்பனையும் கலந்து வெளிவந்த இப்படத்தில் ஜீவா நடித்திருந்தார்.

பா. விஜய் இயக்கத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

கங்குவா:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் கங்குவா. இது ஒரு வரலாற்று கற்பனை திரைப்படம், இதில் ஒரு போர்வீரனின் கதை சொல்லப்படுகிறது. பாலிவுட் பிரபலங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த ஃபாண்டஸி திரைப்படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட் | Best Fantasy Movies In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *