''லோகா'': விரைவில் நஸ்லேன்-கல்யாணி பிரியதர்ஷன் படத்தின் டீசர்…எப்போது தெரியுமா?

''லோகா'': விரைவில் நஸ்லேன்-கல்யாணி பிரியதர்ஷன் படத்தின் டீசர்…எப்போது தெரியுமா?


திருவனந்தபுரம்,

துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி வருகிறார். இப்படத்தில் பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது.  துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டீசர் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *