பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி?|Did popular YouTuber Elakkiya attempt suicide?

பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி?|Did popular YouTuber Elakkiya attempt suicide?


சென்னை,

அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல யூடியூபர் இலக்கியா.

டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு சமூகவலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்துவரும் இவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனால் அவருக்கு போதையாகி உள்ளது.

உடனடியாக அவரை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளனர். ஆனால், அவரது நண்பர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *