Sandy Master’s post about the song “Monica” from the movie “Coolie”

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் “கூலி” படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘மோனிகா’ கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே நடனமாடி உள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதில், பூஜாவுடன் சவுபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இப்பாடலை விஷ்ணு ஏதவன் எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் ராப் செய்துள்ளார்.
பாடலில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலிற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதற்கு வாய்ப்பு கொடுத்த அனைவரையும் குறிப்பிட்டு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் சாண்டி மாஸ்டரும் சவுபின் சாஹிரும் இணைந்து மோனிகா பாடலை பார்க்கின்றனர். சாண்டி மாஸ்டருக்கு சவுபின் அரவணைத்து முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இருந்து வெளியான மோனிகா லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மட்டுமே 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.






