‘கூலி’ படத்தின் 3-வது பாடலின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

‘கூலி’ படத்தின் 3-வது பாடலின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு


சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மூன்றாவது பாடலின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது மூன்றாவது பாடலான “பவர் ஹவுஸ்” என்ற பாடல் வருகிற 22ம் தேதி இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *