Filmmakers agree to change title of JSK to ‘Janaki V vs State of Kerala’

Filmmakers agree to change title of JSK to ‘Janaki V vs State of Kerala’


நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள கே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானகி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம், அந்தப் படத்தின் தயாரிப்பளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

ஜே.எஸ்.கே சினிமாவில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்ற வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த சினிமா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.

இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் அதன் முடிவை விரைவில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே மனு மீதான விசாரணையின்போது ரிவியூ கமிட்டி சினிமாவை பார்க்க உள்ளதாக சென்சார்போர்டு தெரிவித்திருந்தது. ரிவியூ கமிட்டி சினிமாவை முழுமையாக பார்த்த பிறகும் ஜானகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது. பின்னர் நீதிபதிகள் சினிமாவை பார்த்தனர். ஐகோர்ட்டில் நேற்று காலை நடைபெற்ற விசாரணையின்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜானகி என்ற பெயரை மாற்றுவதில் சிரமம் உள்ளதாகவும். டீசர் உள்ளிட்ட அனைத்திலும் ஜானகி என வெளியிடப்பட்டுவிட்டதாகவும். இனி பெயரை மாற்றினால் பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பத்மாவத், பில்லு பி உள்ளிட்ட சினிமாக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்சார்போர்டு கோர்ட்டில் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், பெயரிடுவதற்கு கலைத்துறையினருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது அல்லவா. எனவே, ஜானகி என்ற பெயர் வரும்போது, இது சரித்திர கதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை என எழுத்துவடிவில் காண்பித்தால் போதாதா. ஏற்கெனவே பட்டாளம் ஜானகி என்ற மலையாள சினிமா முன்பு வெளிவந்துள்ளது எனவும் கோர்ட் தெரிவித்தது. சினிமா கதாபாத்திரத்தின் முழிபெயரான ஜானகி வித்யாதரன் என்றோ, ஜானகி வி என்றோ அல்லது வி ஜானகி என்றோ மாற்ற வேண்டும் என சென்சார்போர்டு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சினிமா பெயரை ஜானகி வி vs ஸ்டேட் ஆப் கேரளா எனவும், கதாபாத்திரத்தின் பெயரை வி ஜானகி எனவும் மாற்றுவதாகவும், சினிமா தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்ட அடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *