தர்ஷன் விஷயத்தில் நயவஞ்சக சூழ்ச்சி செய்த குணசேகரன்… எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல், பெண் அடிமை, ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரனை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் வீட்டுப் பெண்கள்.
ஒவ்வொரு முறையும் அவரிடம் போராடும் போதும் பெரிய விஷயத்தில் அவரே ஜெயிக்கிறார்கள், பெண்கள் இன்னமும் அடிமையாக தான் உள்ளார்கள்.
இப்போது கதையில் பரபரப்பின் உச்சமாக தர்ஷன் திருமண எபிசோட் தான் வர இருக்கிறது.
புரொமோ
தர்ஷன் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் விஷயத்திற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என பெண்கள் கூற குணசேகரனும் அப்படியே செய்கிறேன் என கூறி வாக்கு கொடுக்கிறார்.
அவரை நம்பி பெண்கள் தர்ஷனை வீட்டிற்கு வரச் சொல்ல அப்போது தனது நிஜ முகத்தை காட்டியுள்ளார் குணசேகரன். நயவஞ்சகமாக சூழ்ச்சி செய்து உடனடியாக தர்ஷனின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறார்.
இன்னொரு பக்கம் பார்கவியின் தந்தை இறந்த விஷயம் கேள்விப்பட்டு குணசேகரன் வீட்டுப் பெண்கள் பதறிப்போகிறார்கள்.