18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா.. நடிகையின் முதல் காதல் என்னவானது தெரியுமா

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா.. நடிகையின் முதல் காதல் என்னவானது தெரியுமா


சமந்தா 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா.. நடிகையின் முதல் காதல் என்னவானது தெரியுமா | Samantha Talk About Her First Lover And Tattoo

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து, கதையின் நாயகியாகவும் சமந்தா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் Rakt Bramhand – The Bloody Kingdom எனும் வெப் தொடரிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் காதல்



அண்மையில் நடிகை சமந்தா ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய சமந்தா “டாட்டூ குத்திக்கொள்வது என்பது என் வழக்கமாக இருந்தது. ஒரு காலத்தில் டாட்டூ போட்டு வந்தேன். எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருவரை காதலித்தேன். அதுதான் என்னுடைய முதல் காதலாகும். அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என உறுதியாக நம்பியதால், அவருக்காக நான் ஒரு டாட்டூ போட்டுக்கொண்டேன். அந்த காதல் என்னவானது, அந்த டாட்டூ என்னவானது என்பது குறித்தெல்லாம் சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்.

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா.. நடிகையின் முதல் காதல் என்னவானது தெரியுமா | Samantha Talk About Her First Lover And Tattoo



தனது முதல் காதலன் குறித்தும், அவருக்காக சமந்தா போட்டுக்கொண்ட டாட்டூ குறித்து அவர் பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *