பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ

பாக்கியலட்சுமி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கபம் மீனா. இவருடைய கலகலப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் ரோஜா 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், அருவி, அழகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடிகை கம்பம் மீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியான வீடியோ
இந்த நிலையில், நடிகை கம்பம் மீனாவின் மகனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் பாட்டியாகியுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் தெரிவித்துள்ளார் நடிகை கம்பம் மீனா.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் மகன் சூரிய பிரகாஷ் பிறந்தநாள் பரிசாக எனது மருமகள் சிவ ரஞ்சனி அழகான பெண்குழந்தை பெத்து குடுத்துருக்காங்க. எனக்கு பேத்தி பிறந்திருக்காங்க” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.