கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு

இயக்குனர் ஷங்கர் சமீப காலமாக இயக்கும் படங்கள் பெரிய தோல்வியை தான் சந்தித்து வருகின்றன. இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது, அதை தொடர்ந்து அவர் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கிய கேம் சேஞ்சர் படமும் பிளாப் தான்.
அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இயக்குனர் ஷங்கர் பற்றி பேட்டிகளில் காட்டமாக பேசி வருகிறார். கேம் சேஞ்சர் மிகப்பெரிய நஷ்டம், சில விஷயங்களை படம் தொடங்கும்போதே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என ஷங்கர் தேவையில்லாத செலவுகள் செய்தது பற்றி அவர் தாக்கி பேசி இருந்தார்.
முன்பே தெரியும்
ஒரு படம் ஓடுமா ஓடாதா என எடிட்டிங்கின்போதே தெரிந்துவிடும். இந்த படம் எனக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரிந்துவிட்டது. விநியோகஸ்தர்களுக்கும் படம் மீது பெரிய நம்பிக்கை இல்லை” என தில் ராஜு கூறி இருக்கிறார்.
தன் தயாரிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மற்றொரு படமான சங்கராந்திக்கு வஸ்துனம் படம் தான் சற்று வசூல் ரீதியாக காப்பாற்றியது எனவும் அவர் கூறி இருந்தார்.