தாய்லாந்தில் நீச்சல் உடையில் பூனம் பூஜ்வா- வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வா மும்பையைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலமாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக களம் இறங்க தொடங்கினார் பூனம் பாஜ்வா.
சினிமாவில் பூனம் பாஜ்வாவை பார்க்க முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது தாய்லாந்து சென்றுள்ள பூனம் பாஜ்வா அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.