‘தக் லைப்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் ‘தக் லைப்’. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படம் இதுவரை ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தக் லைப் படம் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற ஜூலை 4-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டியில் வெளியாகும். ஆனால் தக் லைப் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருதால் திட்டமிட்ட தேதி முன்னரே ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.