ஓடிடியில் ''தி ஓல்ட் கார்டு 2'': சார்லிஸ் தெரோனின் சூப்பர் ஹீரோ படத்தை எப்போது, எதில் பார்க்கலாம்?

சென்னை,
ஆக்சன் நிறைந்த படங்கள் பார்ப்பதை விரும்புபவர்களா நீங்கள், அப்போது இந்த படம் உங்களுக்கானது. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஆக்சன்-திரில்லர் படமான ”தி ஓல்ட் கார்டு”ன் தொடர்ச்சியாக ”தி ஓல்ட் கார்டு 2” உருவாகி இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் அடுத்த மாதம் (ஜூலை) 2 -ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இதை விக்டோரியா மஹோனி இயக்கியுள்ளார், மேலும் கிரெக் ருக்கா திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்த சூப்பர் ஹீரோ படத்தில் ஆண்டியாக சார்லிஸ் தெரோன் நடித்திருக்கிறார். நைல் பிரீமேனாக கிகி லேன், நிக்கோலோ டி ஜெனோவாவாக லூகா மரினெல்லி, செபாஸ்டியன் லு லிவ்ரேவாக மத்தியாஸ் ஷோனெர்ட்ஸ், ஜேம்ஸ் கோப்லியாக சிவெட்டல் எஜியோபர், குயின்ஹாக வான் வெரோனிகா என்கோ, துவாவாக ஹென்றி கோல்டிங், டிஸ்கார்டாக உமா தர்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.