2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்

2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்


2020ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்களை பற்றி விரிவாக பார்க்காலம்.

சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் ஒரு நிஜ கதை. டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரது வாழ்க்கை வரலாறு தான் இந்த படம்.


இருப்பினும் ஏர்லைன்ஸ் துறையில் குறைந்த விலையில் மக்களுக்கு சேவை வழங்க நினைத்த மற்ற பலரது வாழ்க்கை கதையும் அதில் இணைக்கப்பட்டு இருப்பதாக படத்திலேயே குறிப்பிட்டு இருப்பார் இயக்குனர்.

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள் | 2020 Best Tamil Movies

ஓ மை கடவுளே

காதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஒருவன், திடீரென கடவுளை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் ஒன் லைன் கதை.

ஹீரோ விரும்பிய வாழ்க்கையையே வாழ கடவுளாக வரும் விஜய் சேதுபதி டிக்கெட் கொடுக்கிறார். அந்த திருமணத்தை செய்யாமல் இருந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என வாழ வைக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது, ஹீரோ மனம் மாறுகிறாரா என்பது தான் மீதி கதை.

அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இருவரும் ஓ மை கடவுளே படத்தில் சிறப்பாகவே நடத்து இருப்பார்கள்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

28 பிப்ரவரி 2020ல் ரிலீஸ் ஆன படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி ரக்ஷன் இருவரும் நண்பர்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆன்லைன் ஆர்டர் மோசடி செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

துல்கர் சல்மான் ரிது வர்மா மீது காதலில் விழுகிறார். அவரை நம்பி சென்று துல்கர் சல்மான் மற்றும் ரக்ஷன் இருவரும் தாங்கள் திருட்டுத்தனமாக சேர்த்த பணத்தையும் இழக்கிறார்கள். அதன் பின் அவர்களை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தான் மீதி படத்தின் கதை.

2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள் | 2020 Best Tamil Movies

மூக்குத்தி அம்மன்

RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து இருந்த மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆன படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்கு காரணம் மூட நம்பிக்கைகளை பரப்பும் சில சாமியார்களை எதிர்த்து நிஜமான கடவுளே வந்து கேள்விகள் எழுப்புவது போல கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது தான்.

2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள் | 2020 Best Tamil Movies

தாராள பிரபு

ஹரிஷ் கல்யாண் நடித்த இந்த படம் ஹிந்தியில் வரவேற்பை பெற்ற விக்கி டோனர் என்ற படத்தின் ரீமேக் தான்.

டாக்டராக விவேக் நடித்து இருப்பார். அவர் ஹரிஷ் கல்யாணை துரத்தி துரத்தி விந்தணு தானம் செய்யச்சொல்லி கேட்பார். அவரும் ஒருகட்டத்தில் அதற்காக ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதுவே அவரது சொந்த வாழ்க்கையில் சிக்கலாக மாறுகிறது.

அந்த சிக்கலை எப்படி தீர்த்து வைத்தார் என்பது தான் படத்தின் கதை.
 

2020ம் வருடம் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள் | 2020 Best Tamil Movies


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *