"அறிவான்" படத்தின் "ஆகாய வெண்ணிலாவே" பாடல் வெளியீடு

"அறிவான்" படத்தின் "ஆகாய வெண்ணிலாவே" பாடல் வெளியீடு


சென்னை,

எம்டி பிக்சர்ஸ் வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் “அறிவான்” படத்தின் கதை.

ஒவ்வொரு நொடியும் மனதை அதிர வைக்கும் திருப்பங்களுடன், பரபரவென பறக்கும் திரைக்கதையில், ஒரு புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அருண் பிரசாத். இப்படத்தில் இளம் நடிகர் ஆனந்த் நாக் போலீஸ் அதிகாரியாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மிக முக்கிய வேடங்களில் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், சரத் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை எம் டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் துரை மகாதேவன் தயாரித்திருக்கிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் பணியாற்றிய கார்த்திக் ராம் எரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் படத்தை திரைக்குக் கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாய வெண்ணிலாவே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ‘ உன் விழிகளில் ஓராயிரம் கனா உன் பதில்களில் ஓராயிரம் வினா” எனும் வரிகள் இடம் பிடித்திருக்கிறது இந்த வரிகள் காதலர்களுக்கு பிடித்த வரிகள் என்பதால் காதலித்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்கிடையே இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *