2 நாட்களில் தமிழ்நாட்டில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

குபேரா
தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 20ம் தேதி வெளிவந்த குபேரா படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. இவர் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம்தான் குபேரா. தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரசிகர்கள் பெரிதும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், தனுஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
தமிழக வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 55 கோடி வசூல் செய்திருக்கும் குபேரா திரைப்படம், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது.