அது போன்ற ரோல்.. தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ஜெனிலியா ஓபன் டாக்

அது போன்ற ரோல்.. தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ஜெனிலியா ஓபன் டாக்


ஜெனிலியா 

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பல வெற்றிப்படங்கள் நடித்து வந்தார்.

தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்று கொடுத்தது.

இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது, ஜெனிலியா பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது போன்ற ரோல்.. தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ஜெனிலியா ஓபன் டாக் | Genelia Open Talk About South Indian Films

ஓபன் டாக் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்ததா? என்று ஜெனிலியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ” தென்னிந்திய திரைப்படங்களில் எனக்கு மிக சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. நான் கற்றுக் கொண்ட இடம் அது தான். அங்கு பணிபுரிந்ததற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

நான் ஹைதராபாத்திற்கு சென்றாலும் ஹாசினியை அவர்களுக்கு தெரியும். அந்த கதாபாத்திரங்கள் கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.   

அது போன்ற ரோல்.. தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ஜெனிலியா ஓபன் டாக் | Genelia Open Talk About South Indian Films


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *