2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா


2015ல் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

காக்கா முட்டை

2015 ஜூன் 5ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம் காக்கா முட்டை. அதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றிருந்தது அந்த படம்.

ஏழ்மையில் வாடும் குடும்பத்தில் இருக்கும் இரண்டு சிறுவர்கள், அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். நதிக்கரை ஓரத்தில் இருக்கும் குடிசையில் தான் வாழ்கிறார்கள்.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies

அந்த பகுதியில் திறக்கப்படும் பீசா கடையில் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையில் பணம் சேர்க்க தொடங்குகிறார்கள் இரண்டு சிறுவர்களும். அதற்காக பல வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கடைக்கு போனால், தோற்றத்தை பார்த்து காவலாளி அடித்து துரத்துகிறான்.

அதன் பின் என்ன ஆனது, அவர்கள் பீட்சா சாப்பிட்டார்களா இல்லையா என்பது தான் காக்கா முட்டை படத்தின் கதை.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies

தனி ஒருவன்

ரீமேக் படங்கள் மட்டுமே எடுத்து வந்த மோகன்ராஜா முதல் முறையாக தனது சொந்த கதையை தம்பி ஜெயம் ரவியை (இப்போது ரவி மோகன் என பெயர் மாற்றிக்கொண்டார்) வைத்து எடுத்த படம் தான் தனி ஒருவன்.

ஐபிஎஸ் தேர்வில் ஜெயித்து பயிற்சியில் இருக்கும் நண்பர்கள் சேர்ந்து சமூகத்தில் இருக்கும் மோசமானவர்களை தண்டிக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயம் ரவி பதவிக்கு வந்த பிறகு சித்தார்த் அபிமன்யு (அரவிந்த் சாமி) என்ற பவர்ஃபுல் வில்லன் உடன் மோதுகிறார். அவரை ஜெயித்தாரா இல்லையா என்பதை சுவாரஸ்யமாக காட்டி இருப்பார் இயக்குனர்.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies


பாபநாசம்

2015 ஜூலை 5ம் தேதி ரிலீஸ் ஆனது இந்த படம். மலையாளத்தில் ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின் ரீமேக் தான் இது. கேபிள் டிவி நடத்தி வருகிறார் கமல். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மனைவியும் மகளும் சேர்ந்து ஒருவனை கொலை செய்துவிடுகிறார்கள். அவன் தவறாக நடக்க முயற்சித்தால் அடித்து கொன்றுவிடுகிறார்கள். முக்கிய போலீஸ் அதிகாரியின் மகன் தான் அவன்.

அந்த கொலையை எப்படி தந்திரமாக மறைத்து போலீஸ் விசாரணையில் இருந்து கமல் தப்பிக்கிறார், தனது மனைவி, மகள்களை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies

பாகுபலி

ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆனது இந்த படம். நேரடி தமிழ் படம் இது இல்லை என்றாலும் பல தமிழ் நடிகர்கள் அதில் நடித்து இருக்கிறார்கள். பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும், சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து இருந்தனர்.

Pan India ஹிட் ஆகி மிகப்பெரிய வசூலை குவித்தது பாகுபலி. மக்களை கவரும் வகையில் பிரம்மாண்ட படங்கள் எடுத்தால் வசூல் வரும் என சாதித்து காட்டினார் ராஜமௌலி. அதற்கு பிறகு தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து இப்படி பெரிய படங்கள் எடுக்கப்படுகின்றன.

36 வயதினிலே

ஜோதிகாவின் கம்பேக் படமான 36 வயதினிலே 2015 மே 14ம் தேதி ரிலீஸ் ஆனது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகாவுக்கு சிறந்த கம்பேக் கொடுத்தது இந்த படம்.

என்னை அறிந்தால்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அருண்விஜய், அனுஷ்கா என பலர் நடித்து இருந்த படம் என்னை அறிந்தால்.


2015ல் பிப்ரவரி 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. போலீஸ் அதிகாரியான அஜித், த்ரிஷாவுடன் காதலில் விழுகிறார். த்ரிஷாவுக்கு அப்போது ஒரு மகளும் இருக்கிறார்.

எதிரிகள் ஒரு கட்டத்தில் த்ரிஷாவை கொலை செய்ய, அஜித் எப்படி த்ரிஷாவின்மகளை தனது சொந்த மகள் போல வளர்க்கிறார் என்பது தான் என்னை அறிந்தால் படத்தின் கதை.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies

இன்று நேற்று நாளை

டைம் ட்ராவல் கதையில் 2015ல் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். தற்போது அயலான் என்ற படத்தை இயக்கியவர் தான் அவர்.

எதாவது தொழில் செய்ய வேண்டும் என இருக்கும் ஜீவா மற்றும் அவரது ஜோசியக்கார நண்பரான கருணாகரன் கையில் டைம் மெஷின் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் எப்படி பணம் சம்பாதித்தார்கள், தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை சுலபமாக பெற்றுக்கொண்டார்கள் என்பதையும், அதுவே அவர்களை பெரிய சிக்கலில் எப்படி கொண்டு சென்று விடுகிறது என்பதையும் படம் அழகாக காட்டி இருக்கும்.

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies

டிமான்டி காலனி

22 மே 2015ல் ரிலீஸ் ஆன டிமான்டி காலனி படம் தமிழ் சினிமா கண்ட சிறந்த ஹாரர் படங்களில் ஒன்று.


நான்கு நண்பர்கள் இரு நாள் இரவு பாழடைந்த டிமான்டி காலனி வீட்டுக்குள் செல்கிறார்கள். அதில் இருந்து வெளியிலும் வந்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் சந்தித்த அமானுஷ்யங்கள் தான் மீதி படம்.

ஓகே கண்மணி

மணிரத்னம் இயக்கத்தில் 2015 ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ் ஆனது ஓகே கண்மணி. காதலிக்க தொடங்கும் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள்.

அவர்கள் திருமணம் செய்வார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.
 

2015ல் வெளிவந்து தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள்.. என்னென்ன தெரியுமா | 2015 Best Tamil Movies


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *