எப்படி கடந்து செல்வது, என் மகன்களையும் சேர்த்து.. ஆர்த்தியின் எமோஷ்னல் பதிவு

எப்படி கடந்து செல்வது, என் மகன்களையும் சேர்த்து.. ஆர்த்தியின் எமோஷ்னல் பதிவு


ஆர்த்தி – ரவி மோகன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.

நடந்த ஒரு தயாரிப்பாளரின் மகள் திருமணத்தில் மேட்சிங் உடையில் கிசுகிசுக்கப்பட்ட கெனிஷாவுடன் கலந்துகொண்டார் ரவி. இதனால் கடுப்பான ஆர்த்தி அவருக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதன் பின், ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

எப்படி கடந்து செல்வது, என் மகன்களையும் சேர்த்து.. ஆர்த்தியின் எமோஷ்னல் பதிவு | Aarti Social Media Post On Fathers Day Goes Viral

எமோஷ்னல் பதிவு  

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆர்த்தி இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” என்னை முதலில் நேசித்த, நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர். என்னை சுற்றி பல விஷயங்கள் நிச்சயமற்றது என்பதை நான் உணர்ந்தபோது நீங்கள் மட்டும் என்னுடன் உறுதுணையாக இருந்தீர்கள்.

நான் எப்படி கடந்து செல்வது என்று எனக்கு தெரியாத நாட்கள் இருந்தன, அப்போது என் பக்கத்தில் அமைதியாகவும், உறுதியாகவும், பலமாகவும் நின்றீர்கள்.

நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை எல்லா வழிகளிலும் என் மகன்களையும் சேர்த்து வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *