ப்ரீ புக்கிங்கில் இதுவரை குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

குபேரா
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 20ம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது கண்டிப்பாக வருகிற 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு திரையரங்கில் விருந்து காத்திருக்கிறது என தெரிகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நேற்றில் இருந்து குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதில் இதுவரை ரூ. 37 லட்சம் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.