"ஸ்குவிட் கேம் சீசன் 3" வெப் தொடரின் பைனல் டிரெய்லர் வெளியீடு

"ஸ்குவிட் கேம் சீசன் 3" வெப் தொடரின் பைனல் டிரெய்லர் வெளியீடு


கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. அதனை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து இந்த தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது இந்த வெப் தொடரின் பைனல் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ தான் இந்த தொடரின் கடைசி சாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கதாநாயகனின் மனித தன்மையை பற்றிய வசனங்கள் வெளியானது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Netflix US (@netflix)




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *