பிரேமலு 2 படம் டிராப்.. என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த வருடம் ரிலீஸ் ஆகி எல்லோரையும் வெகுவாக கவர்ந்த படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லென் நடித்து இருந்த படம் பெரிய ஹிட் ஆனது.
கேரளாவில் இருந்து ஹைதராபாத் சென்று பணியாற்றும் ஹீரோயின், மறுபுறம் வெளிநாடு செல்ல காசு இல்லாமல் ஹைதராபாத் சென்று கோர்ஸ் படிக்கும் ஹீரோ. இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட பின் தொடங்கும் காதல் என கதை இளசுகளை கவர்ந்தது.
பிரேமலு 2 என்ன ஆனது?
பிரேமலு ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளை செய்து வந்தனர். ஆனால் தற்போது அந்த ப்ராஜெக்ட் தொடங்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரேமலு 2 கதையில் திருப்தி இல்லாததாலும், ஹீரோ – ஹீரோயின் பிசியாக வேறு படங்களில் நடித்து வருவதாலும் தற்போது இந்த ப்ராஜெக்ட் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதை தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இயக்குனர் கிரிஷ் AD வேறு கதையை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.