சன் டிவியில் விரைவில் ஹிட் சீரியல்களின் சங்கமம்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

சன் டிவி
சீரியல்களின் ராஜாவாக உள்ள தொலைக்காட்சி சன் டிவி.
காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து விதவிதமாக கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகும்.
வாரா வாரம் வரும் டிஆர்பி விவரங்களில் கூட சன் தொலைக்காட்சி சீரியல்கள் டாப் 5ல் அதிக இடங்கள் பிடிக்கின்றன.
மகா சங்கமம்
எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களில் ஒரு டிரெண்ட் வலம் வருகிறது, அதாவது மகா சங்கமம் தான். தற்போது சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களின் மகா சங்கமம் நடக்க உள்ளது.
அதாவது மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல்களின் மகா சங்கமம் விரைவில் சன் தொலைக்காட்சியில் வரப்போகிறதாம்.