கின்னஸ் சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்
ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.
அப்படி Mission Impossible என்ற படங்களின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பேவரெட் நாயகனாக வலம் வருபவர் தான் டாம் க்ரூஸ்.
Mission Impossible திரைப்படத்தின் 8வது பாகமான மிஷன் இம்பாஸிபிள் தி ஃபைனல் ரெக்கனி படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்தது.
கின்னஸ் சாதனை
டாம் க்ரூஸ் மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி’ பட சண்டை காட்சிக்காக கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.