சசிகுமார் அடுத்த ப்ராஜெக்ட்.. ஷூட்டிங்கை தடுத்து நிறுத்திய போலீஸ்

நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் சமீபத்தில் பெரிய ஹிட் ஆனது. ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் படத்தை பாராட்டினார்கள்.
அடுத்து சசிகுமார் ஒரு வெப் சீரிஸில் தற்போது நடித்து வருகிறாராம். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.
நிறுத்தம்
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஷூட்டிங்கை போலீசார் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.
அதற்க்கு பிறகு தான் குழுவினர் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்க சென்று இருக்கின்றனர். அனுமதி கிடைத்த பின் மீண்டும் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறதாம்.