"தக் லைப்" படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படம் இந்தியளவில் முதல் நாள் வசூலாக ரூ.19 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 16 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.






