கமல்ஹாசனின் தக் லைஃப் படம் எப்படி உள்ளது.. வெளிவந்த முதல் விமர்சனம்

கமல்ஹாசனின் தக் லைஃப் படம் எப்படி உள்ளது.. வெளிவந்த முதல் விமர்சனம்


தக் லைஃப்

கமல்ஹாசன்-மணிரத்னம் இருவருமே தமிழ் சினிமாவில் தங்களது துறையில் பெரிய உச்சத்தை எட்டியவர்கள்.

இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தக் லைஃப் என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். சிம்பு, த்ரிஷாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் 5, அதாவது நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சி கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து வந்தது என கூறியதால் பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இதனால் படம் பிளான் செய்தபடி கர்நாடகாவில் ஜுன் 5ம் தேதி வெளியாகப்போவதில்லை.

முதல் விமர்சனம்


இதுவரை படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மும்பையில் தக் லைஃப் படத்தில் இந்தி வெர்ஷன் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் சோஷியல் மீடியா விமர்சகர் உமைர் சந்து படத்தையும் பார்த்துள்ளார்.

கமல்ஹாசனின் தக் லைஃப் படம் எப்படி உள்ளது.. வெளிவந்த முதல் விமர்சனம் | Kamal Haasan Thug Life First Review In Tamil

தக் லைஃப் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர், நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்கள் எல்லாமே புல்லரிக்க வைத்துவிடும்.

கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் நடிப்பிலும் பவர் பேக்ட் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அடிதூள் கிளப்பிட்டாங்க. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ மீண்டும் ரசிகர்களை மிரள விட காத்திருக்கிறது.

5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து ட்வீட் போட்டுள்ளார் உமைர் சந்து.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *