"பென்ஸ்" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்

"பென்ஸ்" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘விக்ரம், கைதி, லியோ’ போன்ற படங்களை போல, ‘பென்ஸ்’ படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த படத்தில் தனுஷின் ‘வாத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ‘பென்ஸ்’ படத்தின் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

“எல்.சி.யுவில் ஏற்கனவே இசையமைப்பாளர்கள்அனிருத் மற்றும் சாம் சிஎஸ் உள்ளனர், நான் மூன்றாவதாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பென்ஸ்’ படத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கலாம். படத்தில் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு பாடல்கள் உள்ளன” என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்திய பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *