இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்



சென்னை,

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் 1983ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கினார். இவர் “பகல் நிலவு, மவுனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர், பொன்னியின் செல்வன்” என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் தற்போது 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து ‘தக் லைப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நாயகன் முதல் தக் லைப் வரை, சக ஊழியர்களாக, குடும்பத்தினராக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சினிமாவின் வாழ்நாள் மாணவர்களாக – நாங்கள் ஒன்றாகக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாயத்திலும், உங்கள் இருப்பு பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் தருணங்களில் நான் திரும்பும் மனம், மற்றும் சிலரைப் போல படத்தின் மொழியுடன் ஆழமாக இணைந்த ஆன்மா. உங்கள் கதைகள் வெளிவரட்டும், ஏனென்றால் ஒவ்வொரு பிரேமிலும் உங்கள் பார்வை சினிமாவுக்கு ஆழத்தையும், அழகையும், அர்த்தத்தையும் தருகிறது. என்றென்றும் உங்கள் நண்பர், கமல்ஹாசன்” என்று பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *