அரபு நாடே பாடலில் வந்த நடிகை கௌரியை நியாபகம் இருக்கா?

தொட்டால் பூ மலரும்
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பி.வாசு, அவரது மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் ஷக்தி வாசுதேவன்.
90களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் 2007ம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு சாதாரணமான வரவேற்பை கொடுத்தது என்றே கூறலாம்.
நாயகி
இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் கௌரி மஞ்சுல். 2005ம் ஆண்டு தெலுங்கில் பன்னி என்ற படம் மூலம் நடிக்க தொடங்கியவர் கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அட அரபு நாடே பாடலில் வந்த நடிகையா இது என போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.