அஜித்தின் காதல் கோட்டை படத்தில் தேவயானிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?… வருந்தும் நடிகை

காதல் கோட்டை
காதல் கோட்டை, தமிழ் சினிமாவில் வெளியான காதல் கதைக்களத்தை கொண்ட படங்களில் இது வித்தியாசமானது.
பார்க்காமலேயே காதல், அதனை அழகாகவும் எடுத்திருந்தார் இயக்குனர் அகத்தியன்.
1996ம் ஆண்டு அஜித், தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கரண், மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
படத்தின் வெற்றிக்கு தேனிசை தென்றல் தேவாவின் இசையும் காரணம் என்றே சொல்லலாம்.
நடிகை வருத்தம்
அஜித் மற்றும் தேவயானிக்கு காதல் கோட்டை படம் அவர்களின் திரைப்பயணத்தில் முக்கியமான படம் என்றே கூறலாம்.
இந்த காதல் கோட்டை படத்தில் தேவயானி கதாபாத்திரத்தில் நடிக்க அகத்தியன் முதலில் நடிகை அஞ்சு அரவிந்திடம் தான் கேட்டுள்ளார்.
அப்போது அவருக்கு வேறு படத்தின் தேதி பிரச்சனையால் நடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த படத்தில் நடிக்காதது நினைத்து அப்போது மிகவும் பீல் செய்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.