ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. இதற்கு இடையில் கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு

ரவி மோகன்
கடந்த வருடம் நடிகர் ரவி மோகன் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய அதிரடி முடிவுகளை எடுத்தார். ஒன்று அவரது பெயரை ஜெயம் ரவியில் இருந்து ரவி மோகன் என மாற்றினார், இது எல்லோரும் செய்வது தான்.
ஆனால் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிர்ச்சி முடிவு எடுத்தார். அவர்களின் இந்த விவாகரத்து பிரச்சனை இன்னும் நடக்கிறது.
குற்றச்சாட்டு
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரவி மோகன்-ஆர்த்தி மனமுறிவு பிரச்சனையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் என பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.