கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவரே உடைத்த ரகசியம்

கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவரே உடைத்த ரகசியம்


 ருக்மிணி வசந்த்

கன்னட நடிகையான ருக்மிணி வசந்த், இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

இவர் நடித்த முதல் தமிழ் படம், அதாவது ஏஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் SK 23 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ருக்மிணி வசந்த்.

கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவரே உடைத்த ரகசியம் | Actress Who Learnt Tamil By Google

ரகசியம் 

இந்நிலையில், ஏஸ் பட விழாவில் ருக்மணி தமிழில் பேசியது எப்படி என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” கன்னட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ‘ஏஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் நடிக்க நான் கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். அதனால் தான் உங்களோடு இப்படி தமிழில் பேச முடிகிறது” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் பலரை ஆச்சிரியம் அடைய வைத்துள்ளது.  

கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட சிவகார்த்திகேயன் பட நடிகை.. அவரே உடைத்த ரகசியம் | Actress Who Learnt Tamil By Google


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *