அதில் எனக்கு ராசி இல்லை, 3வது திருமணத்திற்கு நான்.. நடிகை ஷர்மிளா ஓபன் டாக்

ஷர்மிளா
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷர்மிளா. சினிமாவை தாண்டி திருமணங்கள் மூலம் நிறைய சர்ச்சைகளில் சிக்கினார்.
உயரமான வில்லன் பாபு ஆண்டனியுடன் ஷர்மிளா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். அடுத்து தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்ய விவாகரத்தில் முடிந்துள்ளது, பிறகு ராஜேஷ் என்ற இன்ஜினியரை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு மகன் பிறக்க பின் பிரச்சனை காரணமாக பிரிந்தனர்.
நடிகை பேட்டி
எனக்கு ஆண்கள் ராசி இல்லை என்ற நினைக்கிறேன், முதல் கோணல் முற்றிலும் கோணலாக அமைந்தாலும் நான் விடவில்லை. முதல் திருமணம் தோல்வியில் முடிந்தும் நான் விடவில்லை, 2வது திருமணம் செய்தேன் அதுவும் தோல்வியடைந்தது.
3வது திருமணத்திற்கும் தயாரானேன், ஆனால் மகன் பிறந்துவிட்டான்.
ரிலேஷன்ஷிப்பில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை தான் சந்தித்தேன்.
சினிமாவில் நான் நடித்த படங்கள் சில ஓடாது என்று நினைத்தால் அது ஹிட்டடித்துவிடும். சினிமாவில் இருந்த அதிர்ஷ்டம் எனக்கு கல்யாணத்தில் இல்லை என பேசியுள்ளார்.