'தக் லைப்' படத்தின் ரன்னிங் டைம் இதுதானா?

'தக் லைப்' படத்தின் ரன்னிங் டைம் இதுதானா?


சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனை தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தக் லைப் படத்தின் ரன்னிங் டைமிங் 2 மணிநேரம் 45 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *