’பென்ஸ்’ – எல்சியூவில் இணையும் மலையாள பிரபலம்?|Benz

’பென்ஸ்’ – எல்சியூவில் இணையும் மலையாள பிரபலம்?|Benz


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘விக்ரம், கைதி, லியோ’ போன்ற படங்களை போல, ‘பென்ஸ்’ படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வரும்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *