“தேசிய பாதுகாப்பு நிதிக்கு” நன்கொடை வழங்கும் இளையராஜா| I have decided my concert fees & one month’s salary to the “National Defence Fund”

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு” நன்கொடை வழங்கும் இளையராஜா| I have decided my concert fees & one month’s salary to the “National Defence Fund”


சென்னை,

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் எல்லையோரபகுதிகளில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டும் இன்றி முக்கியமான இடங்களை குறிவைத்து டிரோன்களையும் பாகிஸ்தான் ஏவி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா, தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா,”தேசிய பாதுகாப்பு நிதிக்கு” நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை வேலியன்ட் நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.

இந்த நன்கொடை என் “வேலியன்ட்” இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை” என்று தெரிவித்திருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *